இன்று இதுவரையில் 666 பேருக்கு கொரோனா!

கொரோனா வைரஸ் தொற்று உறுதியான மேலும் 168 பேர் இன்று வெள்ளிக்கிழமை அடையாளம் காணப்பட்டுள்ளனர் என சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

முன்னதாக இன்று (15) கொரோனா தொற்றாளர்கள் 498 பேர் அடையாளம் காணப்பட்டிருந்தனர்.அதன்படி இன்று (15) கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 666 ஆக உயர்வடைந்துள்ளது.

இதற்கமைய, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 530,421 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை,கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 354 பேர் இன்று (15) குணமடைந்தனர்.

அதன்படி, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 491,958 ஆக அதிகரித்துள்ளது.

பள்ளிவாசலில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் 32 பேர் பலி..!

புதிய சுகாதார வழிகாட்டல் வெளியானது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *