மாவட்ட குற்றத்தடுப்புபிரிவினரின் 03 நாட்கள் தொடர் சுற்றிவளைப்பில் பெருமளவு கெரோயினுடன் 3 வர்த்தகர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.
யாழ் மாவட்ட குற்றத்தடுப்புபிரிவின் போதைத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி மேனன் தலைமையிலான குழுவினர் கடந்த மூன்று நாட்களாக மேற்கொண்ட சுற்றிவளைப்பில் யாழிற்கு போதைப்பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தகர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 10 கிராமிற்கு மேற்பட்ட கெரோயின் போதைப்பொருட்கள் மீட்கப்பட்டன.
மேலும் இதில் கொழும்பில் இருந்து யாழ் வந்து யாழ் நகரப்பகுதியில் தங்கியிருந்த வண்ணம் கெரோயின் விற்பனையில் ஈடுபட்டுவந்த கெப்பிட்டிகோலாவ பகுதியை சேர்ந்த 58 வயதுடைய நபர் ஒருவர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டவேளை அவரிடம் இருந்து 2 கிராம் 500 மில்லி கிராம் கெரோயின் மீட்கப்பட்டன என குறிப்பிடப்படுகின்றது.
மேலும் யாழ் குருநகர் பகுதியில் கெரோயின் விற்பனையில் ஈடுபட்டுவந்த 38 வயதுடைய நபர் பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டு சோதனையிட்டவேளை அவரிடம் இருந்து 2 கிராம் 400 மில்லிகிராம் கெரோயின் மீட்கப்பட்டதுடன் யாழில் இருந்து கொழும்பிற்கு சென்று கெரோயின் போதைப்பொருட்களை விற்பனைக்காக வாங்கி வந்த நபர் தொடர்பில் பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் பொம்மைவெளி பகுதியில் உள்ள குறித்த நபரின் வீடு மாவட்ட குற்றத்தடுப்புபிரிவின் போதைப்பொருள் தடுப்புபிரிவினரால் சுற்றிவளைக்கப்பட்டதுடன் இடப்பட்ட சோதனையில் அவரின் உடமையில் இருந்து 5 கிராம் கெரோயின் போதைப்பொருள் பொலிஸாரால் மீட்கப்பட்டன என குறிப்பிடப்படுகின்றது.
எனினும் குறித்த நபர் யாழில் இருந்து பயணத்தடை அமுழில் உள்ள நிலையில் கொழும்பிற்கு சென்று கெரோயின் போதைப்பொருட்களை கொள்வனவு செய்து யாழில் விற்பனை செய்வது கண்டறியப்பட்டதுடன்இ கைது செய்யப்பட்ட கெப்பிட்டிகோலாவ பகுதியை சேர்ந்த நபரும் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் வந்து இங்கு தற்கியிருந்து கெரோயின் விற்பனையில் ஈடுபட்டவருவது பொலிஸாரால் கண்டறியப்பட்டது. விசாரணையில் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் குறித்த போதைபொருள் வர்த்தகத்தில் ஈடுபடும் முக்கிய சூத்திரதாரிகள் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்வதற்காய் மேலும் 5 நாட்கள் பொலிஸ் தடுப்பில் வைத்து விசாரணைகள் மேற்கொள்ள நீதிமன்ற அனுமதி கோரப்பட்டிருந்தது.
அத்தோடு வழக்கை விசாரித்த யாழ் நீதவான் பீற்றர் போல் அவர்கள் மேலு; 5 நாட்கள் பொலிஸ் தடுப்பில் வைத்து விசாரணைக்ள மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்கும் படி பொலிஸாரிற்கு அனுமதியளித்தார்.
மேலும் மாவட்ட குற்றத்தடுப்புபிரிவின் போதைத்தடுப்புபிரிவினரின் நடவடிக்கைகளினால் போதைப்பொருள் வர்த்தகர்கள் கைது செய்யப்பட்டு தடுப்பில் வைக்கப்பட்ட நிலையில் கொழும்பில் இருந்து போதை விற்பனையில் ஈடுபடும் நபர்கள் தற்போது குறித்த பிரிவினரால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


