இலங்கையில் சிறுவர்களை பாலியல் நடவடிக்கைகாக விற்பனை செய்யும் இணையத்தளங்கள்

பெண்கள் மற்றும் சிறுவர்களை பாலியல் நடவடிக்கைகளுக்காக இணையத்தளம் மூலம் விற்பனை செய்யும் மேலும் நான்கு இணையத்தளங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

இது குறித்து தொடர்ந்து விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக பெண்கள் மற்றும் சிறுவர் துஷ்பிரயோக தடுப்புப் பிரிவின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்.

15 வயது சிறுமி ஒருவர் பாலியல் நடவடிக்கைகளுக்காக இணையத்தளம் மூலம் விற்பனை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் முழுமையான விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

குறித்த சம்பவம் தொடர்பில் தற்போதுவரையில் நான்கு இணையத்தளங்கள் தொடர்பான தகவல்கள் கண்டறியப்பட்டுள்ளன.

இந்நிலையில், இதுபோன்று செயற்படும் இணையத்தளங்களை கண்டறிவதற்கான விசாரணைகளை மேற்கொள்ள பெண்கள் மற்றும் சிறுவர் துஷ்பிரயோக தடுப்புப் பிரிவு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

Leave a Reply