கத்திக்குத்து தாக்குதலுக்கு இலக்கான பொலிஸார் வைத்தியசாலையில் அனுமதி

முகத்துவாரம் பகுதியில் நேற்றிரவு இரண்டு பொலிஸ் கான்ஸ்டபிள்கள் கத்திக்குத்து தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர்.

முகத்துவாரம் பகுதியில் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் அதிகாரிகளே இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளனர்.

போதைப்பழக்கத்திற்கு அடிமையான ஒருவரை விசாரணைக்கு உட்படுத்த முற்பட்ட போது குறித்த நபர் இவ்வாறு தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தாக்குதலுக்கு உள்ளான இருவரும், சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *