விவசாயிகளுக்கு சேதனை உரம் தயாரிக்கும் பயிற்சி!

நஞ்சற்ற நாட்டைக் கட்டியெழுப்பும் நோக்குடன் இயற்கை உணவு உற்பத்தி அதிகரிப்பதற்கான செயற்பாடுகளின் கீழ் வெருகல் பிரதேச விவசாயிகளுக்கு சேதனை உரம் தயாரிக்கும் செய்முறை பயிற்சிகள் நேற்று வழங்கப்பட்டுள்ளது.

இப் பயிற்சி, வன்னி ஹோப் ஆஸ்திரேலியா நிறுவனம் மற்றும் தமிழ் போரம் மலேசியா ஆகிய நிறுவனங்களின் நிதி அனுசரணையில், திருகோணமலை மக்கள் சேவை மன்றத்தால், வெருகல் பிரதேச செயலாளர் எம்.எச்.கனி வழிகாட்டலில், மாவடிச்சேணையில் மக்கள் சேவை மன்றத்தின் தலைவர் எம். ரீ. எம். பாரிஸ் தலமையில் இடம்பெற்றது.

அரசாங்கத்தின் சௌபாக்கியா தேசிய வேலைத்திட்டத்தை மேம்படுத்தும் செயற்பாடுகளில் வன்னி ஹோப் ஆஸ்திரேலியா மற்றும் திருகோணமலை மக்கள் சேவை மன்றம் பல முன்னெடுப்புக்களை மேற்கொண்டு வருகின்றன.

அதனடிப்படையில், வெருகல் பிரதேசத்தில் உள்ள 30 விவசாயிகளுக்கு வினைத்திறன் மற்றும் விளைதிறன் மிக்க சேதனை உரம் தயாரிக்கும் தொழிநுட்பரீதியான பயற்சிகளை நிலாவெளி மற்றும் வெருகல் பிரதேச கமநல சேவைகள் நிலைய போதனாசிரியர்களான வாஜித் மற்றும் லுஜிதன் ஆகியோர் வழங்கினர்.

இயற்கையாக கிடைக்கூடியதும் உக்கக்கூடியதுமான வாழைத்தண்டு, வைக்கோள், வீட்டுக் கழிவுகள் கொண்டு விரைவாகவும், இலகுவாகவும் கூட்டெரு உற்பத்தி செய்யும் குவியல் முறையிலான சேதனை உரம் தயாரிக்கும் பயிற்சிகளும் வழங்கப்பட்டது.

அத்துடன், சேதன உரத்தின் பயன்பாடு அதன் முக்கியத்தவம் தொடர்பிலும் தெளிவூட்டல்களும் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.

மேலும், தொழிநுட்ப ரீதியாக தயாரிக்கப்பட்ட சேதனை பசளைகள் அடங்கிய பொதிகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *