பசுமை விவசாயத்தை மேம்படுத்துவதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் விசேட செயலணிக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
14 பேர் அடங்கிய குறித்த ஜனாதிபதி செயலணியின் தலைவராக விஜித் வெலிகல நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி செயலாளர் பி.பீ ஜயசுந்தரவினால், அதனுடன் தொடர்புடைய விசேட வர்த்தமானி அறிவித்தல் கைச்சாத்திடப்பட்டு வௌியிடப்பட்டுள்ளது.
சுற்றுச்சுழலுக்கு ஏற்றவகையில், ஆரோக்கியமான பசுமை வேளாண்மையை உருவாக்க அரசு திட்டமிட்டுள்ளதால், இதன்மூலம் மண், நீரில் சேர்க்கப்படும் இரசாயன கழிவுப் பொருட்கள் குறைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், செயலணியின் ஏனைய உறுப்பினர்களாக லலித் செனவிரத்ன, கசுன் தாரக அமல், மாலிந்த செனவிரத்ன, ரசிக துசித குமார, கலாநிதி பி.கே.ஜி காவந்திஸ்ஸ, சமந்த பெர்னாண்டோ, சமுதித குமாரசிங்க, அஜித் ரண்தூனு, என்.எம் கலீட், ஷம்மி கிரிண்தே, நிர்மலா கரவ்கொட, சமிந்த ஹெட்டிகன்கானம்கே மற்றும் நிஷான் டி சில்வா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.


