இரசாயன உரங்களுக்காக போராட்டம் நடத்துவதில் பயனில்லை! – மகிந்தானந்த

எந்த உரத்தையும் தாருங்கள் என கேட்ட விவசாயிகள் இப்போது இரசாயன உரங்களை மட்டுமே கேட்டு போராட்டம் செய்கின்றனர் என விவசாய அமைச்சர் மகிந்தானந்த அழுத்கமகே தெரிவித்துள்ளார்.

நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும், இரசாயன உரங்களை இறக்குமதி செய்ய இப்போது அரசாங்கத்திற்கு நேரம் இல்லை. அந்த உரங்களை இறக்குமதி செய்ய குறைந்தது இரண்டு மாதங்கள் ஆகும்.

இரசாயன உரங்களுக்காக போராட்டம் நடத்துவதில் எந்த பயனும் இல்லை. இருக்கும் உரத்தைக் கொண்டு பயிர்ச்செய்கை நடத்துங்கள்.

இத்தகைய உரப் பிரச்சினையை சிலர் அரசியலாக்க முயற்சிக்கின்றனர். அசேதன உரங்களைப் பயன்படுத்துவதில் ஏற்படும் குறைபாடுகளுக்கு அரசாங்கம் இழப்பீடு வழங்கும். அதற்கு நான் பொறுப்பு எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *