கிண்ணியா பிரதேசத்தில் வறுமைக்கோட்டின் கீழ் வாழுகின்ற ஆயிரத்து 500 குடும்பங்களுக்கு, கொரோனா அனர்த்த உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.
இந்த நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெறுள்ளது.
அதன்படி, ஜேர்மனி முஸ்லிம் ஹெல்ப் ஃபேன் (Germany Muslimehelfen) அனுசரணையின் கீழ், இலங்கை ஆயிஷா பவுண்டேஷன்- ஹஸனாத் அனாதை இல்லத்தால் குறித்த உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.
இந்த நிகழ்வில், கிண்ணியா பிரதேச செயலாளர் எம். ஏ. அனஸ், ஆயிஷா பவுண்டேசன் பணிப்பாளர் சாதிக் ஹசன் மற்றும் உதவிப் பணிப்பாளர் தாரிக் ஹஸன் ஆகியோர் கலந்து கொண்டனர்





