யாழ்.கரணவாயில் வீட்டுப் பூசை வழிபாட்டின் பின்னர் சுவாமிக்கு படையலிடப்பட்ட உணவை உட்கொண்ட மூதாட்டி மயங்கி வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் நேற்று முன்தினம் வியாழக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.
கரணவாய் – அந்திரன் பகுதியில் இடம்பெற்ற இச்சம்பவத்தில், 82 வயதுடைய ஆறுமுகம் யோகம்மா என்பவரே உயிரிழந்தார்.
நவராத்திரி விழா வீட்டுப் பூசை தினமான நேற்று முன்தினம் வீட்டில் நடைபெற்ற வழிபாட்டின் பின்னர் சுவாமிக்கு படையிலிடப்பட்ட அவல், கடலை என்பவற்றை உண்டுள்ளார்.
இதனையடுத்தே குறித்த மூதாட்டி மயங்கி வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.


