ஹற்றன் – கொழும்பு பிரதான வீதியின் வட்டவலை பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்தார்.
வெலிகல பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய அந்தோனி டொமினிக் என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்தார்.
தனியார் நிறுவனத்தில் வேலை செய்யும் குறித்த இளைஞன், ஹற்றனிலிருந்து நாவலப்பிட்டி நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றவேளை, கரேலினா பகுதியில் விபத்துக்குள்ளானார்.
குறித்த இளைஞன் வட்டவலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மேலும், சடலம் பிரேத பரிசோதனைக்காக நாவலப்பிட்டி ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பில், மேலதிக விசாணைகளை வட்டவலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.





