மீகஹவத்த தெல்கொட பகுதியில் சாரதியின் கவனயீனம் காரணமாக கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று நான்கு வாகனங்கள் மீது மோதி இருவர் உயிரிழந்தனர்.
இதில், முச்சக்கரவண்டி சாரதி மற்றும் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஆகியோர் படுகாயம் அடைந்த நிலையில் கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தனர்.
ஹோமாகம மற்றும் கம்பஹா பிரதேசங்களைச் சேர்ந்த 31 வயது மற்றும் 38 வயதுடையவர்களே விபத்தில் உயிரிழந்தனர்.
குறித்த கார் நிர்மாணப்பணியில் இருக்கும் பாலம் ஒன்றில் இருந்த பீப்பாய் ஒன்றில் மோதிய பின்னர், முன்னால் வந்த இரண்டு முச்சக்கரவண்டிகளிலும், மோட்டார் சைக்கிள் ஒன்றிலும் மற்றும் லொறி ஒன்றிலும் மோதியுள்ளது.
விபத்து தொடர்பில் காரின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.





