பொலிஸ் அதிகாரிகள் இருவர் மீது தாக்குதல்!

மருதானை, கின்சி வீதியில் பயணித்த ஒருவரிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டபோது அந் நபர் பொலிஸ் அதிகாரிகளை கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளனர்.

குறித்த நபரை கைது செய்து மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்த இரண்டு பொலிஸ் அதிகாரிகளும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, இன்று காலை முகத்துவாரம் பகுதியில் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு பொலிஸ் அதிகாரிகளை ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *