நாடளாவிய ரீதியில் 200 மாணவர்களுக்கு குறைவான கல்வி பயில்கின்ற பாடசாலைகளை, எதிர்வரும் 21ஆம் திகதி மீள ஆரம்பிக்க தீர்மானிக்கட்டுள்ளது.
இந்த நிலையில், வவுனியாவில் மீள ஆரம்பிக்கவுள்ள பாடசாலைகள் தொடர்பில் மாணவர்களின் பெற்றோர்கள் சில கோரிக்கைளை முன்வைத்துள்ளனர்.
அதன்படி, பாடசாலையை சிரமதானம் செய்தல், கோவிட் 19 காரணமாக மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்தல் மற்றும் பாடசாலை வெளிகளில் புற்கள் , குப்பை கூழங்களும் இருக்கும் என்பதால் பாடசாலை வளாகத்தை உள்ளூராட்சி மன்றங்கள் துப்பரவு பணிகளை மேற்கொள்வதோடு பிரதேச அரசியல் வாதிகளும் இதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் எனவும் பெற்றோர்கள் கூறியுள்ளனர்.
மேலும், எதிர்வரும் 21 ஆம் திகதி 200 ற்கு குறைவான மாணவர்கள் கல்வி பயிலும் பாடசாலைகள் சுகாதார நடைமுறைகளுடன் ஆரம்பிக்க அதிபர், ஆசிரியர்களும் ஒத்துழைப்பும் வழங்க வேண்டும் எனவும் பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.


