பாடசாலையில் தகரம் திருடியவர் கைது!

நாவலடி பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் தகரம் திருடிய நபரொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கொடிகாமம் – நாவலடி பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் தகரம் திருடியதாக சந்தேகிக்கப்படும் நபர் ஒருவரை கொடிகாமம் பொலிஸார் இன்று சனிக்கிழமை கைது செய்துள்ளனர்.

பாடசாலையில் உள்ள வாகனங்கள் தரிக்கும் கொட்டகைக்கு போடப்பட்டிருந்த தகரமே இவ்வாறு கடந்த 14ம் திகதி திருடப்பட்டிருந்தது.

இவ்வாறு திருடப்பட்ட தகரங்கள் ரூபா 24,000 பெறுமதியுடையவை என கூறப்படுகிறது.

மேலும் இது தொடர்பாக பொலிஸில் பதிவு செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, கைது செய்யப்பட்ட சந்தேகநபரை நாளையதினம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *