இரவோடு இரவாக தென்னம் கன்றுகளை திருடிய கும்பல்

கிளிநொச்சி முகமாலை வடக்குப் பகுதியில் நடுகை செய்யப்பட்டிருந்த நூற்றுக்கும் அதிகமான தென்னம் பிள்ளைகள் இரவோடு இரவாக திருடர்களால் பிடிங்கி செல்லப்பட்டுள்ளது.

இச் சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெறுள்ளது.

முகமாலை பிரதேசத்தில் உள்ள அனைத்து தென்னைகளும் கடந்த கால யுத்தத்தினால் அழிவடைந்திருந்தன.

பின்னர் மீள் குடியேற்றத்தை தொடர்ந்து கண்ணி வெடி அகற்றும் பணிகள் நிறைவுற்று குறித்த காணியில் சுமார் 1,200 தென்னைகள் மீள் நடுகை செய்யப்பட்டன.

இந்த நிலையில் இரவோடு இரவாக 100 க்கு மேற்பட்ட தென்னம் பிள்ளைகள் திருடர்களால் பிடுங்கிச் செல்லப்பட்டுள்ளன.

இது தொடர்பில் காணி உரிமையாளர் பளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *