வடக்கு மாகாண புதிய ஆளுநர் திருக்கேதீஸ்வர ஆலயத்திற்கு விஜயம்.

வடக்கு மாகாணத்தின் புதிய ஆளுநர் ஜீவன் தியாகராஜா நேற்று (சனிக்கிழமை) மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்திற்கு விஜயம் செய்தார்.

வடக்கு மாகாண புதிய ஆளுநராக ஜீவன் தியாகராஜா ஜனாதிபதியால் கடந்த வாரம் நியமிக்கப்பட்டதை அடுத்து, கொழும்பில் உள்ள வடக்கு ஆளுநர் அலுவலகத்தில் தனது கடமையை ஆரம்பித்தார்.

இந்நிலையில், மன்னார் மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்ட அவர், மன்னார் திருக்கேதீஸ்வரம் ஆலயத்தில் இடம்பெற்ற பூஜை வழிபாடுகளில் கலந்துகொண்டார்.

குறிப்பாக திருக்கேதீஸ்வர ஆலய பாலாவி தீர்த்தக் கேணியில் குடத்தில் நீரெடுத்து சிவலிங்கப் பெருமானுக்கு நீர் ஊற்றி வழிபாடு மேற்கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *