மகிந்தானந்த இன்னும் அமைச்சர் பதவியில் இருப்பது வெட்கக்கேடு! – சமிந்த விஜயசிறி

மகிந்தானந்த அளுத்கமகே இன்னும் அமைச்சுப் பதவியில் இருப்பது வெட்கக்கேடானது என்றும், நாட்டில் விவசாயத்தை அழித்த அமைச்சர் என வரலாற்றில் இடம்பிடித்துள்ளார் எனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜயசிறி தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும், சேதன உரங்களை பற்றி பேசிவிட்டு இரசாயன உரங்களை இறக்குமதி செய்து அதனை சேதன உரங்களை போல் விவசாயிகளுக்கு விநியோகிக்க விவசாய அமைச்சர் முயற்சி செய்கிறார்.

இந்த நாட்டில் விவசாயத்தில் ஈடுபட்டுள்ள ஏராளமான மக்கள் உள்ளனர். அவர்களுக்கு சேதன உரம் என்றால் என்ன, இரசாயன உரம் என்றால் என்ன என்று தெரியும். விவசாயிகளை ஏமாற்ற முடியாது.

இவ்வாறு விவசாயிகளை ஏமாற்றுவது வெட்கக் கேடானது. இதற்கு பதில் விவசாய அமைச்சர் மகிந்தானந்த அலுத்கமகே தனது பதவியை இராஜினாமா செய்து விட்டு வீட்டிலே இருக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *