இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 14 ஆயிரத்து146 பேருக்கு கொரோனா

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 41 இலட்சத்து 20 ஆயிரத்து 772 கொரோனா தொற்றுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து, இந்தியாவில் இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 40 இலட்சத்து 67 ஆயிரத்து 719ஆக அதிகரித்துள்ளது.

அதேநேரம், கடந்த 24 மணி நேரத்தில், 144 பேர் தொற்று பாதிப்புக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளனர்.

இதனையடுயடுத்து, கொரோனா தொற்று பாதிப்பினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 இலட்சத்து 52 ஆயிரத்து 124 ஆக அதிகரித்துள்ளது.

தொற்று பாதிப்பில் இருந்து இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3 கோடியே 34 இலட்சத்து 19 ஆயிரத்து 749 ஆக உயர்ந்துள்ளது.

இந்த நிலையில், கொரோனா தொற்றுடன் சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 95 ஆயிரத்து 846 ஆக உயர்ந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *