புத்தளத்தில் விபத்து: 5 பேர் படுகாயம்!

புத்தளம் – கொழும்பு பிரதான வீதியின் மங்களவெளி நவன்டாண்குளம் பிரதேசத்தில் இன்று மாலை இடம்பெற்ற விபத்தில் ஐவர் காயமடைந்துள்ளனர்.

இவ்விபத்து, சிலாபத்தில் இருந்து புத்தளம் நோக்கி பயணித்த லொறியொன்றும், புத்தளத்தில் இருந்து சிலாபம் நோக்கிச் சென்ற லொறியும் நேருக்கு நேர் மோதியதில் இடம்பெற்றுள்ளது.

இரண்டு லொறிகளிலும் பயணித்த ஐவர் படுகாயமடைந்தமையுடன், அவர்களை அங்கிருந்தவர்கள் உடனடியாக சிலாபம் பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

அத்துடன், குறித்த பகுதியில் சில மணி நேரம் போக்குவரத்துக்கள் தடைப்பட்டமையுடன், கடும் வாகன நெரிசலும் ஏற்பட்டுள்ளது.

முந்தல் பொலிஸ் நிலையப் போக்குவரத்து பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து போக்குவரத்தை வழமைக்குக் கொண்டு வந்ததுள்ளனர்.

மேலும், இச் சம்பவம் தொடர்பில் விசாரனைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *