மகிந்தானந்த அலுத்கமகேவுக்கு எதிராக அவநம்பிக்கை பிரேரணை? -ஐக்கிய மக்கள் சக்தி

விவசாயத்துறை அமைச்சர் மகிந்தானந்த அலுத்கமகேவுக்கெதிராக அவநம்பிக்கை பிரேரணையை கொண்டுவருவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க கண்டி – கலகெதரயில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துக்கொண்டு இதனை குறிப்பிட்டுள்ளார்.

உரம் வழங்கல் தொடர்பில் அரசாங்கம் இன்னும் ஒரு முறையான நடவடிக்கை எடுக்கவில்லை.

இவ்வாறு இந்தப் பிரச்சினை நீடிக்கப்பட்டால் அது உற்பத்திகளில் பாரிய தாக்கத்தினை ஏற்படுத்தும்.

எனவே அடுத்த வாரத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூடி விவசாய அமைச்சருக்கு எதிராக அவநம்பிக்கை பிரேரணை கொண்டுவருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என திஸ்ஸ அத்தநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *