சுழிபுரத்தில் கசிப்பு வைத்திருந்தவருக்கு நேர்ந்த கதி..!

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுழிபுரம் பகுதியில் நேற்று மாலை சனிக்கிழமை கசிப்புடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் இது குறித்து தெரியவருவதாவது, சுழிபுரம் மேற்கு பேச்சியம்மன் கோவிலை அண்டிய பகுதியில் ஒருவர் கசிப்பை கையிருப்பில் வைத்திருக்கின்றார் என வட்டுக்கோட்டை பொலிஸின் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்தபகுதிக்கு விரைந்த பொலிஸார் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டனர் என தெரியவருகின்றது.

இச்சோதனை நடவடிக்கையின் போது ஒருவரிடம் இருந்து 750ml கசிப்பு மீட்கப்பட்டது. எனினும் இதனையடுத்து கசிப்பை கையிருப்பில் வைத்திருந்த குற்றச்சாட்டில் குறித்தநபர் வட்டுக்கோட்டை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டார்.

அத்தோடு சந்தேக நபருக்கு எதிராக மல்லாகம் நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *