பிரிட்டன் நாடாளுமன்றம் முன்பாக இலங்கையர் ஆர்ப்பாட்டம்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நீதி கோரி இலங்கையர்கள் குழு நேற்று சனிக்கிழமை மாலை பிரிட்டிஷ் நாடாளுமன்றம் முன் அமைதியான போராட்டம் நடத்தியது.

ஐக்கிய இராச்சியத்தில் வாழும் இலங்கையர்கள் மற்றும் பல ஐரோப்பிய நாடுகளில் வாழும் இலங்கையர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.

இத்தாலி, பிரான்ஸ், அமெரிக்கா மற்றும் பல நாடுகளில் வாழும் இலங்கையர்களின் போராட்ட அலையின் மற்றொரு படியாக இந்த போராட்டம் லண்டனில் ஏற்பாடு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அத்தோடு இனவெறி மற்றும் மதவாதம் இனி தேவையில்லை என்று வலியுறுத்திய போராட்டக்காரர்கள், இலங்கையர்கள் அனைவரும் ஒற்றுமையாக வாழக்கூடிய நாட்டை உருவாக்க அதிகாரிகளுக்கு அழைப்பு விடுத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *