கொரோனா வைரஸ் தொற்று உறுதியான மேலும் 125 பேர் இன்று ஞாயிற்றுக்கிழமை அடையாளம் காணப்பட்டுள்ளனர் என சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
முன்னதாக இன்று (17) கொரோனா தொற்றாளர்கள் 453 பேர் அடையாளம் காணப்பட்டிருந்தனர்.
அதன்படி இன்று (17) கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 578 ஆக உயர்வடைந்துள்ளது.
இதற்கமைய, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 531,648 ஆக அதிகரித்துள்ளது.


