இரண்டு மதா சிசு திடீரென மரணம்..!

பிறந்து இரண்டு மாதங்களேயான ஆண்சிசு உயிரிழந்துள்ளது என்று யாழ்ப்பாணம் போதன மருத்துவமனை தகவல்கள் தெரிவித்தன.

வட்டுக்ககோட்டை அராலி தெற்கைச்சேரந்த சிசு நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3மணியளவில் தாய்ப்பால் கொடுத்தபின் சில நிமிடங்களில் மயக்கமடைந்துள்ளது.

சிசு உடனடியாக யாழ்ப்பாணம் போதன மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அவசரசிகிகச்சைப்பிரிவில் சேர்க்கப்பட்டது.

நேற்று காலை 5.30மணியளவில் சிகிச்சை பயனின்றி சிசு உயிரிழந்தது என்று இறப்பு விசாரனையில் தெரிவிக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் போதன மருத்துவமனை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ந.பிறேமகுமார் விசாரணைகளை மேற்கொண்டார்.

உடற்கூற்றுப்பரிசோதனைக்காக சடலம் யாழ்ப்பாணம் போதன மருத்துவமமனையில் வைக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *