கறுவாத் தோட்டத்தில் காதல் ஜோடி மரணம்

கொலன்ன, பிட்டவெலவில் பயிர்ச்செய்கை நிலத்தில் போடப்பட்டிருந்த மின் கம்பியை தற்செயலாக மிதித்த இளம் காதல் ஜோடி, மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இணையத்தின் மூலம் அறிமுகமாகி காதலித்து வந்த சூரஜ் பிரசன்ன (26) மற்றும் டிக்வெல்லயைச் சேர்ந்த ஹன்சிகா சந்தமாலி (17) ஆகியோரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர்.

இளம் ஜோடியின் உடல்கள், இளம்பெண்ணின் உறவினர் ஒருவருக்கு சொந்தமான கறுவாத் தோட்டத்தில் இருந்து நேற்று காலை மீட்கப்பட்டதாகத் தெரிவித்த கொலன்ன பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *