உரப் பிரச்சினை தொடர்பாக மக்கள் தூண்டிவிட்ட கட்சியை அம்பலப்படுத்திய விவசாய அமைச்சர்

உரப் பிரச்சினையை காரணமாக வைத்து, மக்கள் விடுதலை முன்னணி கட்சி மக்களை தூண்டிவிடுவதாக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

மேலும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அதில் இணைந்திருந்து செயற்படுவதாகவும் விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

அனுராதபுரம் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி உள்ளூராட்சி மன்றங்களின் பொது விழிப்புணர்வு கூட்டத்தில் உர நெருக்கடி தொடர்பாக பேசிய போதே அவர் இதனை தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

நாங்கள் யாரும் விவசாயிகளின் பக்கம் செல்ல மாட்டோம்.எங்களுக்கு தெரியும் இது ஒரு மிகப் பெரிய சவால் என்று.

அவ்வாறு சென்றால் கண்டிப்பாக அவர்கள் கண்டனங்களை தெரிவிப்பார்கள் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

உரப் பிரச்சினையை காரணமாக வைத்து, மக்கள் விடுதலை முன்னணி கட்சி மக்களை தூண்டிவிடுவதாகவும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அதில் இணைந்திருந்து செயற்படுவதாகவும் விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே மேலும் குற்றம் சாட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *