மூளாய் மனித வள அபிவிருத்தி சனசமூக நிலையத்தின் ஏற்பாட்டில் மனித வள முன்பள்ளி மாணவர்களின் 2022 ஆண்டுக்கான வருடாந்த விளையாட்டுப் போட்டி இன்றையதினம் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக ஐக்கிய மக்கள் சக்தியின் யாழ். வட்டுக்கோட்டை தொகுதி அமைப்பாளரான முருகவேல் சதாசிவம் கலந்து சிறப்பித்தார்.
அங்கு கலந்துகொண்டு அவர் கருத்து தெரிவிக்கையில்,
நல் ஒழுக்கமுள்ள புதிய சமுதாயத்தினரை உருவாக்குவதில் கிராமங்களில் காணப்படும் சனசமூக நிலையங்களே பெரும் பங்காற்றுகிறது. அதன் முதற்கட்டமாக இச் சனசமூக நிலையங்களில் நடைபெறும் முன்பள்ளிகளை குறிப்பிடலாம்.
அந்த வகையில் மூளாய் மனித வள அபிவிருத்தி சனசமூக நிலையம் முன்மாதிரியாக செயற்பட்டு வருகின்றது. இதற்கு தற்போதைய நிர்வாக உறுப்பினர்களும் சமூக நலன் கருதி மிகவும் குறைந்த சம்பளத்தில் சேவையாற்றும் ஆசிரியர்களையும் பாராட்டினார்.
மேலும் முன்பள்ளி ஆசிரியர்களுக்கான அடிப்படை சம்பள உயர்வினை எமது ஆட்சி அமையும் பட்ஷம் அதற்கான வழிவகைகளை செய்து தருவதாக கூறியுள்ளார்.
இவ் முன்பள்ளி விளையாட்டுப் போட்டிக்கான நிதிப்பங்களிப்பினையும் அவரே வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.




பிற செய்திகள்