ரஷ்யாவிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதில் இலங்கை பல சவால்களை எதிர்நோக்குவதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதற்கு உள்ள தடைகள் குறித்து பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ரஷ்யாவின் தற்போதைய நிதி நிலைமை, கடன் தரமதிப்பீட்டை விட கடன் தரம் வீழ்ச்சியடைந்துள்ளமை, எரிபொருள் வழங்குநர்கள் பணம் செலுத்தத் தவறியமை மற்றும் கடன் பத்திரங்களை திறக்க முடியாத நிலை போன்ற காரணங்களால் ரஷ்யாவிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.