சுகாதார ஊழியர்களினால் இன்று (02) வடக்கு மாகாண ஆளுநர் செயலகம் முன்பாக ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நியமனங்கள் கிடைத்தும் வேலைக்கு அழைக்கப்படாத சுகாதார ஊழியர்களின் போராட்டம் 155 ஆவது நாளாக இன்றும் தொடர்கிறது.

155 ஆவது நாளான இன்று சுகாதார ஊழியர்களினால் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது நியமனக் கடிதத்துக்கு பதில் கூறுங்கள்இ ஜனாதிபதியின் பணிப்புரையை நிறைவேற்றுங்கள், கிடைக்கப்பட்ட நியமனங்களுக்கு பதில் என்ன?, வடக்கு மாகாண பிரதம செயலாளரே பதிலைக் கூறுங்கள் உள்ளிட்ட பதாகைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.







