கிரிக்கெட் விளையாடிய 17 இளைஞர்களுக்கு நேர்ந்த கதி

மட்டக்களப்பு – பட்டிப்பளை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட பகுதியில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி விளையாடிய 17 இளைஞர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மகிழடித்தீவு விளையாட்டு மைதானத்தில் நேற்று (02) மாலை விளையாடிய இளைஞர்களுக்கே இவ்வாறு பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.

குறித்த மைதானத்தில் இளைஞர்கள் கிரிக்கெட் விளையாடுவதாக சுகாதாரப் பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கமைய, கொக்கட்டிச்சோலை பொலிஸாருடன் குறித்த பகுதிக்கு விரைந்தனர்.

குறித்த இளைஞர்களிடம் பி.சி.ஆர் மாதிரிகள் பெறப்பட்டதுடன், கடுமையான எச்சரிக்கையும் வழங்கப்பட்டு வீடுகளுக்கு அனுப்பப்பட்டனர்.

Leave a Reply