தம்பலகாமம் பிரதேச செயலகம் மற்றும் பிரதேச கலாசார அதிகார சபை இணைந்து நடாத்திய சாகித்திய விழா பிரதேச செயலக மண்டபத்தில் இன்று (26)காலை இடம் பெற்றது.

தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி தலைமையில் இடம் பெற்ற குறித்த விழாவில் பிரதம அதிதியாக திருகோணமலை மாவட்ட செயலாளர் பி.எச்.என்.ஜயவிக்ரம கலந்து சிறப்பித்தார்.
பிரதேச பாடசாலை மாணவர்களுக்கிடையே நடாத்தப்பட்ட கலை இலக்கிய போட்டியில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கு பரிசில்களும் இதன் போது வழங்கப்பட்டதுடன் பாரம்பரிய கலை கலாசார நிகழ்வுகளும் இதன் போது அரங்கேற்றப்பட்டன.
தம்பலகாமம் பிரதேச செயலகம் ஊடாக எழுதப்பட்ட “ஏர்முனை” நூலும் இதன் போது வெளியிட்டு வைக்கப்பட்டன.
குறித்த நிகழ்வில் தம்பலகாமம் பிரதேச சபை தவிசாளர் ஏ.ஜீ.சம்பிக்க பண்டார, உதவி பிரதேச செயலாளர் இரா.பிரசாந்தன் உட்பட சக உத்தியோகத்தர்கள்,பிரதேச கலைஞர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

