பல்லக்கலே, நவ 27
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் அணி அங்கு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. அத்தொடரின் முதலாவது ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணி அபாரமாக பந்து வீசி இலங்கையை ஆல் அவுட் செய்து வெற்றி பெற்றது.
இந்நிலையில் தொடரின் 2வது ஆட்டம் பல்லக்கலேவில் இன்று நடைபெறுகிறது. இந்த ஆட்டத்தில் இலங்கை அணி தோற்றால் தொடரை இலக்க நேர்டும் என்பதால் வெற்றிக்காக கடுமையாக போராடுவர். அதே வேளையில் இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் முனைப்பில் ஆப்கானிஸ்தான் அணி களம் இறங்கும். அதனால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்திய நேரப்படி மதியம் 2.30 மணிக்கு இந்த ஆட்டம் நடைபெறுகிறது.