ஒருபாலின உறவை தடைசெய்யும் சட்டத்தை நீக்கியது சிங்கப்பூர்!

ஒருபாலின உறவு தண்டனைக்குரிய குற்றம் எனும் சட்டத்தை சிங்கப்பூர் நாடாளுமன்றம் இன்று அங்கீகாரம் அளித்தது. ஒருபாலின திருமணங்களுக்கும் அந்நாடாளுமன்றம் அங்கீகாரம் வழங்கியது.

சிங்கப்பூரில் பிரித்தானிய ஆட்சிக்காலத்தில் 1938 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட, தண்டனைச் சட்டக் கோவையின் 377A பிரிவின்படி, வயது வந்த அண்களுக்கு இடையிலான ஒருபாலின உறவு தண்டனைக்குரிய குற்றமாக பிரகடனப்படுத்தப்பட்டிருந்தது. இதற்கு 2 வருடங்கள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.

இச்சட்டம் அமுல் படுத்தப்படக்கூடியதல்ல என சிங்கப்பூர் உச்ச நீதிமன்றம் இவ்வருட முற்பகுதியில் தெரிவித்திருந்தது.

இச்சட்டம் அமுல்படுத்தப்பட மாட்டாது என சிங்கப்பூர் அரசாங்கம் முன்னர் கூறியிருந்தது. எனினும், இச்சட்டத்தை நீக்க வேண்டும் என ஒருபாலின உறவாளர்களின் உரிமைகளுக்காக குரல்கொடுப்போர் வலியுறுத்தி வந்தனர்.

இதையடுத்து 377ஏ பிரிவை நீக்குவதற்கான ஆளும் மக்கள் செயற்பாட்டுக் கட்சியின் திட்டம் குறி;தது கடந்த ஆகஸ்ட் மாதம் பிரதமர் லீ சியன் லூங் அறிவித்திருந்தார்.

ஒருபாலின உறவை தடை செய்யும் 377 ஏ பிரிவை நீக்குவது மற்றும் ஒரு பாலின திருமணங்களுக்கு அங்கீகாரம் அளிக்கும் புதிய சட்டமூலங்கள் தொடர்பில் சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் நேற்றும் இன்றும் விவாதம் நடைபெற்றது.

இந்நிலையில், இரு சட்டமூலங்களும் இன்று அங்கீகரிக்கப்பட்டன.377 ஏ பிரிவை நீக்குவற்கு 93 எம்பிகள் ஆதரவித்தனர். மூவர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஒருபாலின உறவாளர்களின் திருமணங்களுக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில், அரசியலமைப்பை திருத்துவதற்கான சட்டமூலத்துக்கு 85 எம்பிகள் ஆதரவாக வாக்களித்தனர். இருவர் எதிராக வாக்களித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *