எம்.வி. அஸ்ஃபால்ட் பிரின்சஸ் கப்பல் கடத்தற்காரர்களால் விடுவிப்பு

ஓமான் வளைகுடாவில் எம்.வி. அஸ்ஃபால்ட் பிரின்சஸ் கப்பலை பறிமுதல் செய்தவர்கள் கப்பலை விட்டு வெளியேறியுள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

மேலும் எம்.வி. அஸ்ஃபால்ட் பிரின்சஸ் கப்பலில் சென்ற அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாகவும் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

பனாமா-கொடியுடன் சென்ற எம்.வி. அஸ்ஃபால்ட் பிரின்சஸ் கடத்தல் முடிவடைந்துவிட்டதாக இபிரித்தானிய கடல் பாதுகாப்பு நிறுவனம் கூறியுள்ளது.

ஹோர்முஸ் ஜலசந்தி அருகே குறித்த டேங்கர் கப்பல் சென்ற போது, 9 ஆயுதமேந்திய நபர்களால் நேற்று செவ்வாய்க்கிழமை கடத்தப்பட்டது.

கப்பலை யார் கைப்பற்றினார்கள் என்பது தொடர்பான தகவல்கள் வெளியாகாத நிலையில் ஈரானியப் படைகளே கடத்தலில் ஈடுபட்டிருக்கலாம் என குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்தது.

இருப்பினும் தெஹ்ரானுக்கு எதிரான விரோத நடவடிக்கைக்கு ஒரு சாக்குப்போக்காக இந்த குற்றச்சாட்டும் அமைந்துள்ளதாக ஈரானின் புரட்சிகர காவலர்கள் தெரிவித்தனர்.

Leave a Reply