பிக்பாஸ் சீசன் 6 அக்டோபர் 9 ஆம் தேதி தொடங்கியது. இந்த நிகழ்ச்சியை 6 சீசன்களாக கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். 10 பெண் போட்டியாளர்கள், 9 ஆண் போட்டியாளர்கள், ஒரு திருநங்கை என மொத்தம் 21 போட்டியாளர்களுடன் தொடங்கிய நிகழ்ச்சி பாதியை தாண்டியுள்ளது.
தற்போது பிக்பாஸ் வீட்டில் 13 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர். குயின்சி கடந்த வாரம் இந்த வீட்டை விட்டு வெளியேறினார். அதனால் இந்த வாரம் இரண்டு பேர் எலிமினேட் செய்யப்படுவார்கள் என்று கமல்ஹாசன் கூறினார். இதில் யார் வெளியேறுவார்கள் என ரசிகர்கள் பலரும் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில், பிக்பாஸ் வீட்டைப் பொறுத்த வரையில், காலையில் வேலை செய்யும் நிகழ்ச்சி அங்கு ஒளிபரப்பப்படுவது வழக்கம். பல போட்டியாளர்கள் எழுந்து ஆடுவார்கள். அந்த வகையில் தற்போது வெளியாகியுள்ள பாடலில் தனுஷின் உத்தம புத்திரன் படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு பாடலுக்கு ஹவுஸ்மேட்கள் அனைவரும் நடனமாடி வருகின்றனர்.
ஆனால் அதில் ஜனனியின் நடனம் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இதனால் அந்த வீடியோவை ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
The post தனுஷ் படப் பாடலுக்கு தாறுமாறாக குத்தாட்டம் போட்ட ஜனனி… வைரலாகும் வீடியோ.! appeared first on Today Jaffna News – Jaffna Breaking News 24×7.