இலங்கையை உலுக்கிய மோசமான கார் விபத்து

அக்கரைப்பற்று கல்முனை பிரதான வீதியில்  இன்று இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பயணித்துக் கொண்டிருந்த கார் வேக கட்டுப்பாடை இழந்து வீதியோரத்தில் இருந்த மரத்தில் மோதியதால் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக,பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

நிந்தவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்கரைப்பற்று கல்முனை பிரதான வீதி அட்டப்பளம் பகுதியில்  இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில்  அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு பகுதியை சேர்ந்த திருக்கோவில் பிரதேச செயலகத்தில் பிரதம நிருவாக சேவை உத்தியோத்தர்ராக கடமையாற்று திரு.சசிந்திரன்  என்பவரே உயிரிழந்துள்ளார் என தெரிய வருகிறது.

சடலம் கல்முனை அஷ்ரப்வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

விபத்து தொடர்பான மேலதிக விசாரனையை நிந்தவூர் பொலிஸ்சார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply