சுனாமிப் பேரலை இடம்பெற்று 17 வருடங்கள் பூர்த்தியாகும் நிலையில் இன்றைய தினம் நாடாளாவிய ரீதியில் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.
கடந்த 2004 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 26 ஆம் திகதி நாட்டில் வடக்கு கிழக்கு உற்பட பல்வேறு பிரதேசங்களையும் ஆழிப்பேரலை காவு கொண்டு,பலர் உயிரிழந்தனர்.
இந்த நிலையில் இன்றைய தினம்,பேரலையில் உயிர் நீத்த உறவுகளுக்காக ,அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளது.
அந்த வகையில் உடுதுறை பகுதியில் உணர்வு பூர்வமாக சுனாமி நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.






