மறைந்த முன்னாள் நிதி அமைச்சர் மங்கள சமரவீரவினுடைய விலை சூத்திரத்திரமே எரிபொருள் விலையைக் கட்டுப்படுத்துவதற்குச் சிறந்த வழிமுறையாகும் என சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
அதனை நடைமுறைப்படுத்தியிருந்தால் இந்த நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்டியேற்பட்டிருக்காது என்றும் அவர் தெரிவித்தார்.
மித்தெனிய பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும், யாராவது நல்ல காரியங்களைச் செய்திருந்தால் அவற்றை நடைமுறைப்படுத்த வேண்டும்.
மக்கள் மிகவும் சிரமமான சூழ்நிலையில் வாழ்ந்து வருகின்றனர். இன்று இரண்டு மடங்கு பணம் செலுத்தி ஒரு பை மளிகைப் பொருட்களை வாங்கக் கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.
இது மிகவும் கவலைக்குரிய நிலையாகும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.






