நாட்டில் நடைபெறும் போராட்டங்கள் யாருக்கு எதிரானது என அரசில் இருப்பவர்களுக்கு தெரியவில்லை என நாடளுமன்ற உறுப்பினர் முஜிருப் ரகுமான் தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்,
ஒரு போராட்டம் நடைபெறுகிறது என்றால் அது யாருக்கானது, அந்த போராட்ட ஏன் செய்யப்படுகிறது என அரசில் இருப்பவர்களுக்கு தெரியவில்லை.
ஒவ்வொரு போராட்டமும் அரசின் மோசமான செயல்களால் பாதிக்கப்படும், தரப்பினுடைய போராட்டமாகவே பார்க்க வேண்டும்.
இன்று நன்கு அறிந்த விடயம் புகையிரத சேவையாளர்களின் போராட்டம். இப் போராட்டம் குறித்து அரசாங்கம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
புகையிரத சேவையாளர்களின் குறைபாடுகளை அவர்கள் பிரச்சினையாக கருதவில்லை. புகையிரத சேவையின் போது ஏற்படும் சேவையாளர்களிற்கு ஏற்படும் பாதிப்புகள் மற்றும் பயணிகளிற்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து அரசுக்கு தெரியாது.
இப்படி ஒவ்வொரு விடயங்களும் அரசுக்கு தெரியவில்லை. இது தங்களுக்கு உரியது, தமக்காக தான் போராட்டம் இடம்பெறுகிறது என்று கூட தெரியவில்லை. இதனை இப்படியே விட்டு விட முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.