வெளிநாட்டவர்களை திருமணம் செய்யும் இலங்கையர்கள் பாதுகாப்பு அமைச்சின் அனுமதியைப் பெற வேண்டும் என அரசாங்கம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கைக்கு ஐக்கிய மக்கள் சக்தி கண்டனம் தெரிவித்துள்ளது.
இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க,
திருமணம் மனிதனின் அடிப்படை உரிமை. இவ்வாறான சுற்றறிக்கை ஒருவரது அடிப்படை உரிமைகள் மற்றும் சுதந்திரங்களை மீறும் செயல்.
பதிவாளர் நாயகம் இவ்வாறான சுற்றறிக்கையை வெளியிடும் நடவடிக்கை கண்டிக்கத்தக்கது எனவும் அவர் தெரிவித்தார்.
வெளிநாட்டு பிரஜைகளுக்கான திருமண பதிவு கெடுபிடி: மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு!