‘குடும்ப ஆட்சி நாட்டை அழிக்கும்’ எதிர்க்கட்சி தீவிர பிரச்சாரம்

நாட்டு மக்கள் நெருப்புடன் கூடிய துன்பத்தில் வாழ்ந்து வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ள்ளார்.

அம்பலாந்தோட்டை பகுதியில் இடம்பெற்ற துண்டுப் பிரசுரம் விநியோகம் செய்யும் செயற்பாட்டில் ஈடுபட்ட பின்னர் அவர் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.

மேலும் , நாட்டு மக்கள் நெருப்புக்கு பதிலாக, நெருப்பால் எரிகிறார்கள்.

மத்திய வங்கியின் ஆளுநர் டொலர் மாபியாவின் கைப்பாவை .

அவர் நாட்டின் அனைத்து பிரஜைகளுடனும் ஏற்றுமதியாளர்களுடனும் விளையாடுகின்றார்.

அத்துடன் நாட்டின் பொருளாதாரத்தை சீரழிக்கும் பணியை முன்னெடுத்த ஒருவர் பதவி விலகியுள்ளார்.

எனினும் நாட்டின் பொருளாதாரத்தை அழித்த குற்றத்திற்கான பொறுப்பில் இருந்து அவர்களால் விடுவிக்க முடியாது என தெரிவித்துள்ளார்.

மக்கள் மத்தியில் உரையாற்றிய பின்னர், நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து தயாரிக்கப்பட்ட “குடும்ப ஆட்சி நாட்டை அழிக்கும்” துண்டுப் பிரசுரத்தை எதிர்க்கட்சித் தலைவர் விநியோகித்துள்ளார்.

தங்கள் நகைகளை ஒளித்து வைத்து வாழ வேண்டிய சூழ்நிலையில் தாய்மார்கள் உள்ளனர்! சாணக்கியன் எம்.பி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *