பிரேசிலின் வடகிழக்கு பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக குறைந்தது 18 பேர் உயிரிழந்துள்ளதுடன் 280 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
பாஹியா மாநிலம் முழுவதும் உள்ள கிட்டத்தட்ட 40 நகரங்களை வெள்ளம் பாதித்துள்ளமையால் 35000 க்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்தில் உள்ளார் என்று பாஹியாவின் சிவில் பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
அங்கே கூடுதல் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதாக இயற்கை பேரிடர் கண்காணிப்பு முகவர் எச்சரித்துள்ளது.
கன மழை தொடர இருப்பதால் மீட்புப் பணிகள் வேகமாக நடைபெற்று வருவதாக அப்மாகாண ஆளுநர் ரூய் கோஸ்டா தெரிவித்தார்.