இரசாயன உர வகைகளை இறக்குமதி செய்ய 12 நிறுவனங்களுக்கு அனுமதி

இரசாயன உர வகைகளை இறக்குமதி செய்வதற்கு 12 நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக தேசிய உர செயலக பணிப்பாளர் சந்தன லொகுஹேன தெரிவித்துள்ளார்.

கலப்பு உரங்கள் மற்றும் யூரியா உர வகைகளை இறக்குமதி செய்வதற்கு இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மரக்கறி செய்கை, பழ வகைகள், நெற் செய்கை மற்றும் ஊடுபயிர்கள் போன்றவற்றுக்கு இந்த உரங்களை பயன்படுத்த முடியும்.

எதிர்வரும் இரண்டு மாதங்களுக்குள் சந்தையில் தட்டுப்பாடின்றி இரசாயன உரங்களை கொள்வனவு செய்ய முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், 2000 மெட்ரிக் தொன் NPQ உர வகை ஏற்கனவே நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. அந்த அனுமதிக்கு அமைவாக 1500 மெட்ரிக் தொன் யூரியா உரம் விரைவில் இலங்கைக்கு கிடைக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அந்த உரங்கள் அரசாங்கத்தின் மானியத்திட்டத்தின் கீழ் வழங்கப்படமாட்டாது என்றும் அவர் கூறியுள்ளாா்.

திருக்கோவில் சம்பவத்தில் உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தர் அழகரெத்தினம் நவீனனின் பூதவுடல் கண்ணீர் மல்க நல்லடக்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *