புத்தளம் ஐ.எப்.எம். முன்பள்ளிக்கு புதிய மாணவர்களை இணைத்துக்கொள்ள சந்தர்ப்பம்

புத்தளம் நகரின் தமிழ் மொழி மூலமாக முதன் முதலாக ஸ்தாபிக்கப்பட்ட புத்தளம் மூன்றாம் குறுக்குத்தெரு மௌலாமகாம் மர்கஸ் பள்ளி வளாகத்தில் இயங்கும் ஐ.எப்.எம். முன்பள்ளிக்கு 2022 ம் ஆண்டுக்கான புதிய மாணவர்கள் சேர்த்துக்கொள்ளப்படவுள்ளனர்.

2022 ஜனவரி மாதம் மூன்று வயது பூர்த்தியான பிள்ளைகள் ஐ.எப்.எம். முன்பள்ளியில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளதுடன், அதற்கான விண்ணப்பங்களும் கோரப்பட்டுள்ளன.

பிள்ளைகளை சேர்த்து கொள்ள விரும்புவோர் 10.01.2022 திங்கட்கிழமைக்கு முன்னர் மாணவர் அனுமதிக்கான விண்ணப்பத்தை பொறுப்பாசிரியையின் வீட்டில் அல்லது பாடசாலையில் பெற்றுக்கொள்ளுமாறு கேட்கப்பட்டுள்ளனர்.

மாதாந்த கட்டணத்தை தவிர எவ்வித முன்கட்டணங்களும் அறவிடாத புத்தளம் நகரின் ஒரேயொரு
முன்பள்ளியான ஐ.எப்.எம்.முன்பள்ளி சமூகத்தின் பல பிரபலங்களை உருவாக்கிய பெருமையோடு தனது பொண் விழாவில் (50 வது வருடத்தில்) கால் பதிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இதுதொடர்பில் மேலதிக தகவல்களை பெற முன்பள்ளி நிர்வாக பொறுப்பாளர் எம்.யூ.எம்.சனூன் 0770 737475 மற்றும் பொறுப்பாசிரியை 0724559285 ஆகியோருடன் தொடர்புகொள்ளுமாறு கேட்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *