மூதூர் பிரதேச இந்து குருமார் சங்கத்தினருக்கும் மூதூர் – கட்டைபறிச்சான் இராணுவ முகாம் பொறுப்பதிகாரிக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் இன்று திங்கட்கிழமை (27) மூதூர் சகாயபுரம் அறநெறிப் பாடசாலையில் இடம்பெற்றது.
மூதூர் 64 ஆம் கட்டை மலையடிப் பிள்ளையார் ஆலயத்தில் வைக்கப்பட்டிருந்த பிள்ளையார் சிலைக்குமேல் சில தினங்களுக்கு முன்னர் இனந்தெரியாத நபர்களால் புத்தர் சிலையொன்று வைக்கப்பட்டிருந்தது.
இச்செயற்பாட்டை கண்டித்து மூதூர் பிரதேச இந்துகுருமார்கள் கடந்த 25 ஆம் திகதி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் ஆர்ப்பாட்ட இடத்திற்கு வருகை தந்து கொட்டியாராம விகாராதிபதிக்கும் மூதூர் பிரதேச இந்து குருமார் சங்கத்தினருக்கும் வாய்த்தர்க்கம் ஏற்பட்டிருந்தது.
இதனை அடுத்து மூதூர் பொலிஸார் தலையிட்டு பிரச்சினையை சுமூக நிலைக்கு கொண்டு வந்திருந்தனர் .
இக்கூட்டத்தின்போது பிரச்சினை இடம்பெறாத வகையில் தவிர்க்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் ,பிரச்சினைகளை சுமூகமாக கையாளல், பிரச்சினை ஏற்பாட்டால் அனுகும்முறை போன்ற முக்கிய விடயங்கள் குறித்து ஆராயப்பட்டுள்ளது.