கொரோனா தொற்றுக்கான பூஸ்டர் தடுப்பூசி பெற்றுக்கொள்வோரின் எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.
சுகாதார மேம்பாட்டுப் பிரிவின் பணிப்பாளர் டொக்டர் ரஞ்சித் பட்டுவந்துதாவ இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
மேலும், பண்டிகைக் காலம் என்பதனால் பூஸ்டர் தடுப்பூசி பெற்றுக்கொள்வோர் எண்ணிக்கையில் வீழ்ச்சியை அவதானிக்க முடிகின்றது.
ஒமிக்ரான் திரிபின் பாதிப்புக்கள் ஒப்பீட்டளவில் குறைவானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
டெல்டா திரிபினால் ஏற்படும் தாக்கங்களை விடவும் ஒமிக்ரான் திரிபின் தாக்கங்கள் குறைவானது என அவர் தெரிவித்துள்ளார்.
தடுப்பூசி ஏற்றிக்கொண்டவர்களுக்கு ஒமிக்ரான் திரிபு தாக்கினால் அந்தளவிற்கு பாதிப்பு ஏற்படுவதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பண்டிகைக் காலம் என்பதனாலும், தடுப்பூசி ஏற்றியதும் கைகளில் ஏற்படும் வலி காரணமாகவும் பூஸ்டர் தடுப்பூசி பெற்றுக்கொள்வோரின் எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது மேலும் தெரிவித்துள்ளார்.






