மேலும் ஒரு இராணுவ அதிகாரிக்கு பயணத்தடை விதித்த அமெரிக்கா

மேலும் ஒரு இலங்கை இராணுவத்தின் ஜெனரல் தர அதிகாரி ஒருவருக்கு பயணத்தடையை அமுல் படுத்தியது அமெரிக்கா.

ஜெனரல் உதய பெரேரா இறுதிப் போரில் கிளி நொச்சி ஹெட் குவார்ட்ஸ்ல் கட்டளையிடும் அதிகாரியாக செயற்பட்டவர்.

இறுதிப் போரில் இடம் பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் குற்றச்சாட்டுகள் உள்ளமை தெரிந்ததே.

இந்நிலையில் ஜெனரல் உதய பெரேராவும் அவரது குடும்பத்தினரும் கடந்த டிசம்பர் 5 ம் திகதி சிங்கப்பூர் விமானசேவையூடாக சிங்கப்பூர் செல்வதற்கும் அங்கிருந்து அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சலிஸ் நகருக்கு செல்லவும் திட்டமிட்டு சிங்கப்பூர் விமான சேவையை அணுகியபோதே மேற்படி தடை பற்றிய விபரங்கள் குறித்த சிங்கப்பூர் விமான சேவை அதிகாரிகளால் உதய பெரேரோ குடும்பத்தினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

சவேந்திர சில்வா, உட்பட மூவருக்கு அமெரிக்க பயணத் தடை ஏற்கனவே உள்ள நிலையில் நான்காவது நபராக உதயபெரேரோ பெயரிடப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *