உதய பெரேராவை போர்க்குற்றச் சந்தேக நபராக அறிவித்தது அமெரிக்கா ; விமான நிலையத்தில் இருந்தும் திருப்பி அனுப்பப்பட்டார்

2009-2011 வரை மலேஷியாவில் இலங்கையின் பிரதி உயர்ஸ்தானிகராக இருந்த மேஜர் ஜெனரல் உதய பெரேராவை போர்க்குற்றச் சந்தேக நபராக அமெரிக்கா பெயரிட்டுள்ளது.

ஓகஸ்ட் 2019 இல் வழங்கப்பட்ட ஐந்தாண்டு பல்நுழைவு அனுமதி விசாவை அவர் பெற்றிருந்தாலும் அவருக்கு அமெரிக்காவிற்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

தனது மனைவி மற்றும் அவரது புதல்வருடன், டிசம்பர் 5 ஆம் திகதி இரவு, சிங்கப்பூர் நோக்கி பயணிப்பதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்தின் குடிவரவு பிரிவுக்கு சென்றபோது, அமெரிக்காவின் முடிவு குறித்து அவருக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் இருந்து பெரேரா உள்ளிட்ட குடும்பத்தினர் லொஸ் ஏஞ்சல்ஸ் செல்லத் திட்டமிருந்த நிலையில், பெரேராவின் மனைவியும் புதல்வரும் பயணத்தை தொடர்ந்தனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *