
பைசர் (Pfizer) தடுப்பூசிகளை ஏற்றிய விமானம் இன்று (28) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.
அதற்கமைய, மேலும் 1,47,770 பைசர் தடுப்பூசிகள் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.
அரச மருந்தக கூட்டுத்தாபனத்தினால் முற்பதிவு செய்யப்பட்ட தடுப்பூசிகள், கொழும்பிலுள்ள மத்திய ஔடதங்கள் களஞ்சியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
