இன்று நடைபெற்ற நுகர்வோர் அதிகாரசபை கலந்துரையாடலில் பேலியகொடவில் எரிவாயு கசிவு காரணமாக இறந்த பெண்ணின் கணவரும் பொது அமைப்பின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த கலந்துரையாடலில், எரிவாயு நிறுவனத்தின் அதிகாரிகள் சிலரும் கலந்து கொண்டுள்ள நிலையில், இப்படி ஒரு எரிவாயு வெடிப்பு இடம்பெற்றது தெரியாது என்றும், ஒருவர் உயிரிழந்தமை தெரியாது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
தமக்கும் இந்த கலந்துரையாடலுக்கும் தொடர்பு இல்லாதவர்கள் போல எரிவாயு நிறுவன அதிகாரிகள் அங்கு அமர்ந்திருந்தனர் என பாதிக்கப்பட்டவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
மேலும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிற்கு எந்த நஷ்ட ஈடும் அழிக்கவில்லை.
அதற்கான நடவடிக்கையை எடுங்கள் இல்லை எனில் உங்கள் மீது நஷ்ட ஈடு கோரி மனு தாக்கல் செய்யப்படும் என அதிகாரசபை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.